திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (17:40 IST)

ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட தேர்தல் - பரப்புரை ஓய்ந்தது!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் பரப்புரை முடிந்தது. 
 
மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சிகளில் இருந்து வெளியேற வேண்டும்.
 
முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் மாலை 5 மணியுடன் நிறைவு.
 
5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சிகளில் இருந்து வெளியேற வேண்டும்.
 
6ஆம் தேதி வரை முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிப்பு உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.