1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin in five economic advisors

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்கள் இவர்கள் தான்!

முதல்வர்
முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்கள் இவர்கள் தான்!
தமிழக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பதும் இந்த ஐந்து பேர்களும் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிபுணர்களாக போற்றப்பட்டு வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த பொருளாதார ஆலோசனை குழுவில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஜீன் ட்ரீஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இருப்பார்கள் என ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 
இந்த பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐவரும் உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞராக இருந்து வருகின்றனர் என்பதால் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
திருநெல்வேலியில் சிங்கம் உலா வருகிறதா? – வைரலான வீடியோ குறித்து காவல்துறை விளக்கம்!