தமிழகம் முழுவதும் மின்துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதலாக அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் மின்துறையில் உள்ள சிக்கல்கலை தீர்க்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய மின் இணைப்பு பேட்டி, மின்பெட்டி பழுது, மின் தடை, தாழ்வாக செல்லும் மின்கம்பி, மின் வயர்கள்...