திருநெல்வேலியில் சிங்கம் உலா வருகிறதா? – வைரலான வீடியோ குறித்து காவல்துறை விளக்கம்!

Lion
Prasanth Karthick| Last Modified திங்கள், 21 ஜூன் 2021 (13:37 IST)
திருநெல்வேலி சிமெண்ட் ஆலை அருகே சிங்கம் உலா வருவதாக வெளியான வீடியோ குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைதளங்களில் அவ்வபோது போலி வீடியோக்கள் பல வைரலாகும் நிலையில் தற்போது சிங்கம் ஒன்று உலாவும் வீடியோ வைரலாகியுள்ளது. திருநெல்வேலி சிமெண்ட் தொழிற்சாலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிங்கம் ஒன்று உலாவுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதுகுறித்து திருநெல்வேலி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள திருநெல்வேலி மாவட்ட துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், குஜராத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை அருகே சிங்கம் உலவும் காட்சியை திருநெல்வேலி என சிலர் போலியாக பரப்பி வருவதாகவும், வந்ததிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :