1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin give pongal gift today

இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு: முதல்வர் ஆரம்பித்து வைக்கிறார்!

பொங்கல்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்
 
இதனை அடுத்து என்று தமிழ்நாடு முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
பொதுமக்கள் தங்கள் அரிசி அட்டை ரேஷன் கார்டுகளை எடுத்துக் கொண்டு சமூக இடைவெளியை பயன்படுத்தி வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
About Writer
siva