1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (12:59 IST)

பொங்கல் தினத்தில் டிவியில் ‘ஜெய்பீம்’: ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு சில அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்த போதிலும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய்பீம் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை ஜெய்பீம் படத்தை பார்க்க தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே பொங்கல் தினத்தில் அஜித்தின் வலிமை உள்பட ஒருசில படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் டிவியில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது.