1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:40 IST)

பட்ஜெட் தொடரிலேயே நீட் விலக்கு மசோதா

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது அலை ஒருவேளை உருவானால் தேதி மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.  
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கூடுதல் தேர்வு மையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகம் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. 
 
இதனிடையே நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்து சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்படும் எனவும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதேபோல அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக பேசியுள்ளார்.