பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை
பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி திறப்பது குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில், அமெரிக்கா, பிரேசில் நாடுகளை அடுத்த இந்தியா அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது 2 வது அலை பரவிவருகிறது.
விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கத் தயாராக உள்ளதாக சமீபத்தில் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
ஒன்றைரை ஆண்டுகளாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடம் கற்று வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி திறப்பது குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும் விரைவில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.