திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (19:00 IST)

7.5% உள் ஒதுக்கீடு குறித்து பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை: முதல்வர்

நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து இன்னும் தமிழக கவர்னர் முடிவு எடுக்காமல் உள்ளார். இதனை அடுத்து திமுகவினர் ஆவேசமான அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
 
நீட் தேர்வை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு துரோகமிழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டணி 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநருக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என்று பேச எந்த அருகதையும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறதே என்ற அச்சத்தில் அறிக்கை அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் என்றும், ஸ்டாலினின் நீலிக் கண்ணீர் மக்கள் மனங்களில் சலனத்தை ஏற்படுத்தாது என்றும், வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தங்களால்தான் எல்லாம் நடந்தது என காண்பிக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் முடிவு செய்வதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்றும், நீட் தேர்வை இந்தியாவில் அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் செய்தது திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் என்றும் முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.