திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (15:52 IST)

கமலுக்கு கொக்கி போடுகிறதா திமுக… அடக்கி வாசிக்கும் நம்மவர்!

நடிகர் கமலை சட்டசபைத் தேர்தலில் தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல் அதிமுக அமைச்சர்களின் பேச்சால் சீண்டப்பட்டு மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து 3 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறார். இதனால் அவருக்கான சினிமா வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டப் பேரவை தேர்தலை அவர் பெரிதும் நம்பி இருக்கிறார்.

இந்நிலையில் அவரை எப்படியாவது தங்கள் கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டும் திமுக மேலிடம் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர்க்கு 25 சீட்கள் வரை தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதால்தான் சமீபகாலமாக கமல் திமுகவை விமர்சனம் செய்வது இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற பெயரில் கட்சி தொடங்கிய கமல் திமுகவுடன் தனது முதல் தேர்தலிலேயே கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Courtesy வலைப்பேச்சு