வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (20:51 IST)

சர்வதேச அளவில் தங்கம் : சிலம்பாட்டத்தில் சாதித்த சிங்கப்பெண்!

சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றிபெற்று தங்க பதக்கம் வென்று தமிழகத்துக்கு மற்றுமொரு மணிமகுடம் சூடியிருக்கிறார் திண்டுக்கல் மாணவி பிரதீபா.

திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பிரதீபா. சிறுவயதிலிருந்தே சிலம்பாட்டம் மீது ஆர்வம் கொண்டிருந்த பிரதீபாவுக்கு, பழனியை சேர்ந்த வேங்கைநாதன் பயிற்சி அளித்திருக்கிறார்.

பள்ளி பருவத்திலிருந்தே மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார் பிரதீபா. இந்நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் மாணவி பிரதீபா.

மேலும் அடுத்தடுத்து உலக அளவில் நடைபெறும் பல போட்டிகளிலும் பங்கேற்று சாதனை புரிவதே தனது லட்சியம் என கூறியிருக்கிறார் பிரதீபா. உலக அளவில் சாதித்த திண்டுக்கல் சிங்கப்பெண் பிரதீபாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.