திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (12:04 IST)

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுனர் ஆர்.என்.ரவி: பரபரப்பு தகவல்!

governor
ஒரே மேடையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய இருவரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த சில வாரங்களாக தமிழக அரசுக்கும் ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி செவிசாய்க்க இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது 
 
மேலும் திமுக பிரமுகர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆளுனரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் 931 க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டங்களை வழங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது