ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (20:53 IST)

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

mks udhayanidhi
முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வும் முதல்வரின் மகனுமான உதயநிதி ரூபாய் 25 லட்சம் இலங்கை தமிழர்களுக்கான நிதி உதவியாக அளித்துள்ளார் 
 
இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது என்பதும் திமுக காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகளும் தனிநபர் தலைவர்களும் நிதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் திமுக இளைஞரணி சார்பில் இருபத்து ஐந்து லட்ச ரூபாய் காசோலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம்இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தந்துள்ளார். இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் 
முக ஸ்டாலின்  அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து, திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினோம்