வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (13:40 IST)

கோவை சிறையில் கைதிகள், வார்டன்கள் இடையே மோதல்!

coimbatore central jail
கோயம்புத்தூர் மத்திய சிறைக்குள் வார்டன்கள், கைதிகள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மத்திய சிறை செயல்பட்டு வரும் நிலையில், இங்குள்ள சிறைக் கைதிகள் மற்றும் வார்டன்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த திடீர் மோதலில், கைதிகள் தாக்கியலில் 4 சிறைவார்டன்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த வார்டன்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறைவளாகத்தில் மரத்தின் மீது ஏறிக் கொண்ட கைதிகள் தங்கள் கைகளில் பிளேடால்  கீறிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதிகள்,வார்டன்கள் இடையேயான மோதல் விவகாரம் தொடர்பாக டிஐஜி சண்முகசசுந்தரம் சிறை வளாகத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.