1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (13:21 IST)

என் பொண்ணு சாகுற அளவு கோழையில்ல.. அவன்தான் காரணம்! – சித்ரா தாயார் பரபரப்பு புகார்!

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா இறந்ததற்கு ஹேமந்த்தான் காரணம் என சித்ராவின் தாயார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள சித்ராவின் தாயார் “தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் பெண்ணை நான் வளர்க்கவில்லை. அவள் தைரியமானவள். என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஹேமந்த்தான் என் மகளை கொன்றிருக்க வேண்டும்” என அழுகையுடன் கூறியுள்ளார். இதனால் மேலும் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் ஹேமந்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.