தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

gold
Prasanth Karthick| Last Modified வியாழன், 10 டிசம்பர் 2020 (11:38 IST)
கடந்த சில நாட்களில் மெல்ல விலை அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று திடீரென அதிக தொகைக்கு விலை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை சரிந்துள்ளது. 
 
இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.37,160க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.39 ரூபாய் உயர்ந்து ரூ.4,645க்கு விற்பனையாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :