1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Child porn videos upload team found

சிறார் ஆபாச படங்களை பரப்பிய குழுக்கள் கண்டுபிடிப்பு..

சிறார் ஆபாச படம்
சிறார் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்புவது, இண்டெர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்வது, பதிவேற்றம் செய்வது ஆகியவை குற்றம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி எம்.ரவி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிறார்களின் ஆபாச படங்களை சேமித்து வைத்து பரப்பி வரும் 3 குழுக்களை குற்றத்தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களின் செல்ஃபோன் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணிக்கவில்லை எனவும் ஏ.டி.ஜி.பி.ரவி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
ஜியோவுக்கு ஆப்பு வைத்த ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு