புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (15:35 IST)

”கஜானாவை காலி செய்வதே அதிமுகவின் நோக்கம்”.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக அரசு கஜானாவை காலி செய்து விட்டு போவதே அதிமுகவின் நோக்கம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜி எஸ் டி சட்டம் அமல்படுத்தியதிலிருந்து அதனை எதிர்த்து பல கண்டனங்களை தெரிவித்தவர் திமுக தலைவர் முக ஸ்டாலின். இதனை தொடர்ந்து ஜி எஸ் டியால் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாகி வருவதாக பலர் குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.

இந்நிலையில் ஜி எஸ் டி சட்டத்தை செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த தனது வாக்குறுதியை மீறியுள்ள பாஜக அரசின் மீது வழக்கு தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்  என கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகி கொண்டிருக்கும் நிலையில் கஜானாவை காலி செய்து விட்டு போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தான் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது’ என குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.