ஜனவரிக்கு தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்? குழப்பத்தில் தேர்தல் ஆணையம்

Sugapriya Prakash| Last Modified சனி, 7 டிசம்பர் 2019 (15:23 IST)
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக, வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.
 
தொகுதி மறு வரையறை செய்த பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதில் தமிழகத்தில் தொகுதி மறு வரையறை செய்யப்படாத ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த ஒன்பது மாவட்டங்களில் தொகுதி மறு வரையறை செய்த பின்னர் நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்தது. 
 
இதனையடுத்து மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சித் தேர்தல் தேதி மாற்றப்படும் என்றும் புதிய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்பதும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் புதிய தேதியில்தான் தேர்தல் நடைபெறும் என்பதும் தெரியவந்தது. 
 
இந்நிலையில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மறு உத்தரவு வரும் வரை, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. 
 
 மேலும், உள்லாட்சி தேர்தல் ஜனவரி மாதம் நடக்ககூடும் எனவும், இது குறித்த அரசாணை இன்று மாலை அல்லது திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :