1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (14:37 IST)

ஹாசினி கொலை வழக்கு: மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு

ஹாசினி கொலை வழக்கு: மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்த் மேல்முறையீடு செய்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
 
சென்னையை சேர்ந்த தஷ்வந்த் என்பவன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 7ம்தேதி, தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியின் உடலையும் எரித்து கொலை செய்தான். எனவே அவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஹாசினி கொலை வழக்கு: மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு

 
 
அந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிபதி, குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, தஷ்வந்த் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தான்.
 
இந்நிலையில், இன்று அந்த மேல்முறையீடு மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாங்காடு போலீசாரை இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்