1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (10:51 IST)

10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை; பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி

பாகிஸ்தானில் ராணுவ நீதிமன்றம் 10 பயங்கரவாதிகளுக்கு  விதித்த மரண தண்டனையை அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார்.
பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய 10 பயங்கரவாதிகளுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 5 ஸ்டார் ஹோட்டலில் தாக்குதல், பிரபல இசைக்கலைஞர் அம்ஜத் சப்ரியை கொலை செய்தது, ஆயுதப் படை மீது தாக்குதல் நடத்தி 17 அதிகாரிகளைக் கொன்றது என இதுவரை 62 கொலைகளை செய்துள்ளனர் இந்த 10 பயங்கரவாதிகள்.
 
அந்த 10 பயங்கரவாதிகளின் பெயர்கள் பின்வருமாறு முகமது இஸ்டாக், முகமது ரபீக், முகமது ஆரிஷ், ஹபிபுர் ரகுமான், முகமது பயஸ், இஸ்மாயில் ஷா, முகமது பசல், ஹஸ்ரத் அலி, முகமது ஆசிம், ஹபிபுல்லா ஆவார்கள்.
இந்நிலையில் இந்த 10 பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்து உள்ளார். எனவே 10 பயங்கரவாதிகளும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.