1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (11:38 IST)

போதை மருந்து விற்பவர்களுக்கு மரண தண்டனை; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் போதை மருந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் மன்செஸ்டரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போதை மருந்துக்கு அடிமையாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது என்றார்.
 
கடந்த 2016-ம் ஆண்டில் போதை மருந்துக்கு அடிமையாகி 63,600 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இதனையடுத்து அமெரிக்கவில் போதை மருந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். அதற்காக சட்டதிருத்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். டிரம்பின் இந்த முடிவிற்கு  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.