1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2018 (20:10 IST)

மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு; தஷ்வந்த வழக்கறிஞர்

குற்றவாளிக்கு தஷ்வந்துக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தஷ்வந்த வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி அளித்தார்.

 
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த குற்றவாளி என நிரூபனமானது. செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நீதிமன்றத்தில், நீதிபதி வேல்முருகன் வாழ்க என்ற கோஷம் ஒலித்தது. 
 
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த தஷ்வந்த் வழக்கறிஞர் ராஜ்குமார் கூறியதாவது:-
 
தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த மேல்முறையீடு செய்வார். தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று கூறியுள்ளார்.