செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (14:11 IST)

இடைத்தேர்தலுக்கு பின் ஆட்சியா ? ஆட்சிக்கலைப்பா ? – ஸ்டாலின் பதில் !

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக ஆட்சி அமைக்குமா அல்லது ஆட்சியைக் கலைத்து தேர்தல் நடத்த விரும்புமா என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. இடைத்தேர்தலில் பெரும்பாண்மை பெற்று அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக முயற்சி செய்து வருகிறது. இது சம்மந்தமாக பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின் ‘தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலை மட்டும் மனதில் வைத்திருக்கக்கூடாது. மோடியை வெளியே அனுப்புவதுபோல எடப்பாடியையும் வெளியே அனுப்பப்போகிறோம். இந்த தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும்’ எனப் பேசினார்.

இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏன் ஆட்சியைக் கலைக்கவில்லை எனக் கேட்கின்றனர். நாங்கள் ஜனநாயக வழியில் செயல்பட விரும்புகிறோம். இடைத்தேர்தல்களுக்கான தேதி அறிவிக்கப்பட்டதன் மூலம் இதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இடைத்தேர்தலுக்குப் பின்னர் திமுகவுக்கு பெரும்பாண்மைக் கிடைத்தால் ஆட்சி அமைக்குமா அல்லது சட்டமன்றத்தைக் கலைக்குமா  என்பதை கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம்’ எனக் கூறினார்.