அப்போ கூவி கூவி வித்தும் வாங்கல, இப்போ கிலோ கோழி மவுசு ரூ.500!
கோழிக்கறி தற்போது ரூ.500க்கு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வருவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை நம்பி கடந்த மாதங்களில் கோழி சாப்பிடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் மக்கள்.
இதனால் கிலோ 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி வந்த கோழிக்கறி 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டது. விலை இவ்வளவு குறைந்தும் கூட மக்கள் கோழிக்கறி வாங்க ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் இப்போது கோழி இறைச்சி ரூ.180 வரை விலை உயந்துள்ளது. ஆம், மொத்த விற்பனைக் கடைகளில் பிராய்லர் உயிர்க்கோழி கிலோ ரூ.140 எனவும். சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ. 260 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக்கோழி கிலோ ரூ. 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.