வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 மே 2020 (12:01 IST)

சென்னை டூ கோத்தகிரி : நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்!

கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் ராதாரவி. சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிய இவர் தமிழக பாஜகவில் இணைந்தார். கடந்த 10ம் தேதியன்று சென்னையிலிருந்து கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார் ராதாரவி.

இதுகுறித்து அறிந்த கோத்தகிரி சுகாதார அதிகாரிகள் ராதாரவியின் பங்களாவுக்கு சென்று விசாரித்ததில் அவர் உரிய அனுமதி பெற்ற பிறகே சென்னையிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. பிறகு அவரது பங்களாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.