1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chess Olympiad Series - ₹ 10 crore financial allocation

செஸ் ஒலிம்பியாட் தொடர்: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர்!

chess
தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்
 
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் போட்டி ஆன செஸ் ஒலிம்பியாட் தொடர் வெற்றிகரமாக நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை செய்து வருகிறது 
 
இதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க ரூபாய் 10 கோடி நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக அரசின் இந்த அறிவிப்பு செஸ் வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
டெஸ்லா பணியாளர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை