வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (21:43 IST)

இதை உறுதி செய்ய முடியுமா முதல்வர் அவர்களே? திருப்பதி நாராயணன் கேள்வி

tirupathi
கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம்; தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது. ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 சதவீதம் மட்டுமே"  என  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பதிலளித்துள்ளா பாஜகவின் நாராயண் திருப்பதி, ‘தமிழகத்தில் கார்கள் உற்பத்தியாவது செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தான். ஆனால், அந்த  தொழிற்சாலைகளின் மூலம் பெறும் வரி வருவாயை அந்த மாவட்டங்களுக்கு மட்டுமே செலவிடுவதாக உங்களால் உறுதி கூற முடியுமா திரு. ஸ்டாலின் அவர்களே? 
 
அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்ய முடியுமா  முதல்வர் அவர்களே? என கேள்வி எழுப்பியுள்ளார்.