1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai youth dead who speaking cellphone while charging

சார்ஜர் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிய 22 வயது இளைஞர் பரிதாப பலி.. சென்னையில் சோகம்..!

செல்போன்
சார்ஜர் போட்டு கொண்டே செல்போனில் பேசிய 22 வயது சென்னை வாலிபர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்ற 22 வயது இளைஞர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் அருகில் வீடு ஒன்றில் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிவடைந்ததும் செல்போனை சார்ஜரில் போட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். 
 
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காமராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் பேச்சு.. பா ரஞ்சித் உதவியாளர் மீது வழக்கு..!