1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. india corona virus status 1131

24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 15 பேர் பலி.. மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

கொரோனா
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று 1300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1331 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நேற்றைவிட சுமார் 500 பேர் குறைவு.
 
 மேலும் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,49,72,800 என குறைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 15 பேர் பலியாகியுள்ளதாகவும், இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,31,707 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வரை தினசரி கொரோனா பாதிப்பு 10,000 என்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வெந்தயத்தை ஊற வைத்து சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லதா?