செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 மே 2023 (07:50 IST)

கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப பலி..!

கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக பலியானதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் என்ற பகுதியில் நேற்று சுற்றுலா படகு சென்று கொண்டிருந்தது. இரண்டு அடுக்கு சுற்றுலாப்படகான இந்த படகில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை இதனை அடுத்து இந்த படகில் பயணம் செய்த அனைவரும் கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் வைத்து குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஐந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 21 பேர் பலியானதாகவும் சிலர் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஒரு சிலர் கடலில் மூழ்கி மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva