செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (17:44 IST)

’’மூலிகை மைசூர்ப் பாக்...’’பொய்யான விளம்பரம் செய்த கடைக்கு சீல்!

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோவை குணமாக்கும் என்று மூலிகை மைசூர்பாக் விற்பனை செய்து வந்த கடைக்கு கோவை உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரொனாவால் மக்கள்  பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். பல தொழில்கள் நலிவடைந்துள்ளது. இருப்பினும் சிலர் அதை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி வருவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் தொட்டிபாளையம் அருகே உள்ள பகுதியில் செயப்பட்டு வரும் ஒரு  இனிப்புக் கடையில் எங்கள் கடையில் உள்ள மூலிக மைசூர்ப்  சாப்பிட்டால் ஒரெ நாளில் கொரொனா குணமடையும் என கூறி விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை உணவுப் பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று 120 கிலோ மைசூர்ப் பாக்குகளை பறிமுதல் செய்தனர். அதன்பின் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள அக்கடைக்கு அதிகாரிகள் சீழ் வைத்தனர்.

குறிப்பாக இந்த மூலிகை மைசூர்பாக் கடைக்கு எந்த அனுமதியும் என்பதற்காகவும் பொய்யான விளம்பரம்  செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.