1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 மே 2023 (15:10 IST)

சென்னை பல்கலைக்கழக M.Phill தேர்வு முடிவுகள்: தேதி அறிவிப்பு..!

Madras University
சென்னை பல்கலைக்கழகத்தின் M.Phill தேர்வு முடிவுகள் எப்போது என்ற தேதியை பல்கலைக்கழக நிர்வாகம் சற்று முன் அறிவித்துள்ளது. 
 
சென்னை பல்கலைக்கழகத்தில் M.Phill படிக்கும் மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் செமஸ்டர் தேர்வினை எழுதினர். இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது நாளை M.Phill தேர்வு முடிவுகள் வெளியாகும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த பிப்ரவரி மாதம் மாணவர்கள் எழுதிய தேர்வு நிலையில் தேர்வு தாள் திருத்தப்படும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும் இதனை அடுத்து நாளை http://unom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran