வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 18 மே 2023 (07:55 IST)

தமிழகத்தின் மின் தேவையை விட சென்னையின் மின் தேவை அதிகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Senthil Balaji
ஒட்டுமொத்த தமிழகத்தின் சராசரி மின் தேவையை விட சென்னையின் மின் தேவை அதிகமாக உள்ளது என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அதிகாரிகளுடன் சென்னை அண்ணா சாலை மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் அளவுக்கு மின் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் இருப்பினும் மின்வினியோகம் சீராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த தமிழகத்திற்கான சராசரி தேவையை விட சென்னையின் மின் தேவை அதிகமாக இருப்பதால்தான் சென்னையில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் மின்சார துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்,.

மேலும் சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ளது மின்வெட்டு அல்ல என்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்படும் மின் தடை தான் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் சென்னையில் தேவைக்கு ஏற்ப 13 துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva