திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (12:11 IST)

நாளுக்கு நாள் மோசமாகும் சென்னை: இன்றைய நிலவரம்!

சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு. மண்டல வாரியாக பாதிப்பு விவரம் இதோ...
 
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 2 ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,000 தாண்டியுள்ளது. ஆம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.
 
அதில் சென்னையில் மட்டும் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னை 15 மண்டலத்தில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,211, தண்டையார்பேட்டையில் 5,989, தேனாம்பேட்டையில் 5,655, அண்ணா நகரில் 5,397, கோடம்பாக்கத்தில் 5,316, திரு.வி.க நகரில் 4,132, அடையாறில் 3,057, வளசரவாக்கத்தில் 2,201 ஆக பாதிப்பு உள்ளது.