தொடர்புடைய செய்திகள்
- திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் போராட்டம்: ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு
- மின் கட்டண முறைகளை மாற்றியமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.. அதிரடி அறிவிப்பு..!
- வந்தே பாரத் ரயில்.. சென்னையில் இருந்து நெல்லை எந்தெந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம்?
- நாளை மறுநாள் முதல் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?
- ட்விட்டர் எக்ஸ் ஓபன் பண்ணவே இனி கட்டணம்! – எலான் மஸ்க் குடுக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி!
தொடர் விடுமுறையால் உச்சம் சென்ற விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு 11 ஆயிரம் ரூபாயா?
தொடர் விடுமுறையால் பேருந்துகள் மற்றும் ரயிலில் செல்ல முடியாத பயணிகள் விமானத்தில் செல்ல முயற்சி செய்யும் நிலையில் விமானத்தில் கட்டணம் உச்சம் சென்றுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக பெறப்படும் விமான கட்டணத்தில் இருந்து விடுமுறை காரணமாக மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,853 வசூலிக்கப்படும். ஆனால் இன்று ரூ.11,173 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னையிலிருந்து சுற்றுலாத் தலமான தாய்லாந்துக்கு வழக்கமாக 9 ஆயிரம் வசூலிக்கப்படும். ஆனால் இன்று ரூ.22,000 முதல் ரூ.39ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் வளைகுடா நாடுகளுக்கு விமானம் கட்டணம் அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Edited by Siva
