ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (11:10 IST)

ட்விட்டர் எக்ஸ் ஓபன் பண்ணவே இனி கட்டணம்! – எலான் மஸ்க் குடுக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி!

Elon mUsk
ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல சேவைகளுக்கும் கட்டணம் வசூலித்து வரும் எலான் மஸ்க் அடுத்ததாக ட்விட்டர் பயன்படுத்தவே ஒவ்வொருவருக்கும் கட்டணம் விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில் முக்கியமானது ட்விட்டர். உலகம் முழுவதும் உள்ள பல அரசியல்வாதிகள், தலைவர்கள், நடிகர்கள், பெரும் நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை மக்களுடன் பகிர ட்விட்டர் முக்கிய தளமாக உள்ளது,

ஆனால் சமீபத்தில் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து ட்விட்டர் பயனாளர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ப்ளூ டிக்கிற்கு கட்டணம், பணியாளர்கள் வேலை நீக்கம் போன்றவை ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால் ஆபாச வீடியோக்கள் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவது மேலும் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக ட்விட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரிடமும் பயன்பாட்டிற்கான கட்டணம் விதித்து வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு கட்டணம் விதிக்கப்பட்டால் பலரும் ட்விட்டரை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செய்கைகள் தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Edit by Prasanth.K