திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் போராட்டம்: ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ரூ.500 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
தமிழக மின்சார வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணம் , மல்டி இயர் டாரிப் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உற்பத்தி நிறுத்த போராட்டடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்கள், சாலை ஆலைகள் மற்றும் 19 சங்கங்கள் ஆதரவளித்தன.
இந்த நிலையில், இன்று திருப்பூரில் பனியன் நிறுவனங்கள், எம்ராய்டரி பிரிண்டிங் ஆலைகள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளன. இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகிறது.