தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை இருந்து வரும் நிலையில் பிப்ரவரி 27, 28 ஆக தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகளில் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் பிப்ரவரி 24 வரை தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவரமும் என்றும் ஆனால் அதே நேரத்தில் 27 28 ஆகிய இரண்டு நாட்கள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த சில நாட்களுக்கு மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Mahendran