தொடர்புடைய செய்திகள்
- 10 நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
- நிலத்தடி வெப்பநிலை மாற்றம்: சென்னை போன்ற நகரங்களில் கட்டடங்களுக்கு என்ன ஆபத்து?
- கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி- முதலமைச்சர் அறிவிப்பு
- தமிழகத்தில் அடுத்த 2 தினங்களில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னையில் சாம்பியன் எக்ஸ் தொழில்நுட்ப மையம்!
சென்னை - கடலூர் புதிய ரயில் பாதை.. இனி மாமல்லபுரத்திற்கு ரயிலில் போகலாம்..!
சென்னையில் இருந்து கடலூர் வரை மாமல்லபுரம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது அது குறித்து அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
சென்னையிலிருந்து கடலூர் வரை 179.28 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூபாய் 2670 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கடலூர் வரை அமைக்கப்படும் இந்த புதிய ரயில் பாதை மாமல்லபுரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளதை அடுத்து இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த புதிய ரயில் பாதை பணிகள் முடிந்துவிட்டால், அதன்பின்னர் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு ரயிலில் செல்லலாம் என்று குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
