திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (20:51 IST)

15 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு செயற்கைக்கோள்: சென்னை இளைஞர்கள் சாதனை

ஒரு சாட்டிலைட்டை உருவாக்க இந்திய விண்வெளித்துறை பல கோடிகளை செலவு செய்து வரும் நிலையில் வெறும் ரூ.15 ஆயிரத்தில் சென்னை இளைஞர்கள் செயற்கைகோள் செய்து அசத்தியுள்ளனர். இந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது
 
ஏரோஸ்பேஸ் என்ற பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், அமர்நாத், கிரிபிரசாத் மற்றும் சுதிதான்  ஆகிய இளைஞர்கள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளனர். க்யூப் இன் ஸ்பேஸ் என்ற போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்த செயற்கைக்கோளை உருவாக்கியதாகவும், 3டி பிரிண்டெட் நைலானை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கொள் என்றும் இதன் எடை வெறும் 33 கிராம் மட்டுமே என்றும் இந்த இளைஞர்கள் கூறியுள்ளனர்.
 
30 முதல் 40 நாட்களில் இந்த செயற்கைக்கோள் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், 70 கிமீ தூரம் வரை செல்லும் இந்த செயற்கைகோள் மூலம் வானிலை, பருவநிலை மாற்றம், நைலானின் ;பண்புகள் உள்ளிட்ட 20 வகையான பாரா மீட்டர்ஸ் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் இந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். இந்த செயற்கைகோள் உருவாக்க ரூ.15 ஆயிரம் செலவானதாகவும், அந்த தொகையை நான்கு பேர்களும் பகிர்ந்து செலவு செய்ததாகவும், இதனை நாசா மற்றும் ஐடூடுல் பலூன் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் துல்லியமான பருவநிலை மாற்றங்களையும் அதிக மழை பொழிய உள்ள இடங்களையும் கண்டறியலாம் என்றும் இந்த இளளஞர்கள் தெரிவித்துள்ளனர்.