சேலம் சென்னை செல்லும் வழியிலுள்ள சீலனாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியிலிருந்து 8வழி விரைவு பாதைகளுக்காக குறிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியில் 20 அடிக்கு ஒரு காவல் துறையினரோ அல்லது காவல்துறையினரின் வாகனமோ நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் பெயர் வேண்டாம், பதறும் விவசயிகள் சராசரி விவசாயிகளான எங்களின் நிலை குறித்து யாரிடம் சொல்ல? என்கின்றார் இவ்வழி தடத்தில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள். பெயரை சொல்லக் கூடாது என்ற நிபந்தனைகளை விதித்தபடியே பலரும் பேசுகின்றனர்....