1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (07:54 IST)

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக அம்மனிடம் மனு அளித்த மக்கள்

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கடுமையாக எதிர்த்து வருகின்றனர் இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இந்த சாலைக்கான பணிகளை அரசு செய்து வருகிறது
 
மேலும் இந்த திட்டத்தை எதிர்த்து கருத்து சொல்பவர்கள், போராட்டம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டும் வருவதால் பொதுமக்கள் நூதன முறையில் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
சென்னை-சேலம் 8 வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தர்போது அம்மனுக்கு பொங்கல் வைத்து இந்த சாலையை நிறுத்த வேண்டும் என்று அம்மனிடம் மனு கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு சேலம் மின்னாம்பள்ளி பஞ்சாயத்தில் குள்ளம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டபோது ஒருசிலருக்கு திடீரென சாமி வந்தது. அவர்கள் 'டேய்... நீங்க யாரும் பயந்துக்க வேண்டாம். உங்க நெலத்தை எடுக்க முடியாது. நான் நெலத்த விட மாட்டேன்'' என்று அருள் வாக்கு கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
8 வழி சாலைக்கு எதிராக பொதுமக்கள் நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளதால் அரசு செய்வதறியாது திகைத்து இருப்பதாக கூறப்படுகிறது.