திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 மார்ச் 2022 (11:22 IST)

132 பேரை பலி கொண்ட விமான விபத்து! – சீன விமானத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!

சீனாவில் கடந்த 21ம் தேதி நடந்த பயணிகள் விமான விபத்தில் கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் தேதி சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து புறப்பட்டு குவாங்சு மாகாணத்திற்கு 132 பயணிகளுடன் பயணித்த போயிங் 737 விமானம் நடுவானில் மாயமானது. பின்னர் கிடைத்த தகவலின்படி அந்த விமானம் விபத்திற்குள்ளானது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 132 பேரும் இறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான விபத்தின் காரணம் குறித்து அறிய விமானத்தின் கருப்பு பெட்டிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி முதல் கருப்பு பெட்டி கண்டறியப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.