1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai rehabitation centre death case

போதை மறுவாழ்வு மையத்தில் கொலை; கொல்ல சொன்ன உரிமையாளர்! – திடுக்கிடும் தகவல்கள்!

Chennai
சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்கள் முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் ராஜ் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

மறுவாழ்வு மையத்தில் இருந்த அந்த 7 பேரிடம் வீடியோ கால் மூலமாக பேசிய மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் லோகேஸ்வரி மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் இருவரும் ராஜை கொல்ல சொன்னதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!