1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 மே 2022 (14:42 IST)

பத்தினிதான்னு கற்பூரம் ஏத்தி நிரூபி..! – மனைவி கையை கருக்கிய கணவன்!

Karpooram
கர்நாடகாவில் தனது மனைவியின் நடத்தையை சந்தேகப்பட்ட கணவன் கையில் கற்பூரத்தை ஏற்ற வைத்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்துள்ளார் ஆனந்த்.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை எழுந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆனந்த் தனது மனைவியிடம் “நீ கற்புக்கரசி என்பதை கையில் கற்பூரம் ஏந்தி காட்டி நிரூபி” என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியும் கையில் கற்பூரத்தை ஏந்தியுள்ளார். இதனால் அவரது கை தீப்பற்றி கருகியுள்ளது.

ஆனாலும் அவரை ஆன்ந்த் மருத்துவமனை அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையறிந்த சமூக சேவகர் ஒருவர் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்ததுடன் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான ஆன்ந்தை தேடி வருகின்றனர்.