1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (08:59 IST)

சென்னையில் 9% அதிக மழை: குடிநீருக்கு நோ தட்டுப்பாடு?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு புயல்கள் வரிசைக்கட்டி வந்து அதிகப்படியான மழையை பொழிந்துவிட்டது. அதோடு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைதுள்ளது என கூறப்பட்டது.  
 
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பதிவாகியுள்ளதாம். அதாவது அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 39.6 செ.மீ மழை அளவுக்கு பதில் 43.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பைவிட 47% அதிகமாக 102.9 செ.மீ மழை பதிவாகிவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல். குறிப்பாக சென்னையில் இயல்பை விட 9% அதிகமான மழை பதிவாகியுள்ளது. 
 
இதனால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பிய நிலையில் வரும் ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என தெரிகிறது.