தொடர்புடைய செய்திகள்
- தண்ணீர் குடிக்கும் போது பல்லை விழுங்கிய பெண்… உயிரிழந்த சோகம்!
- அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
- நேற்று குறைந்து இன்று உயர்ந்த தங்கம் - இன்றைய நிலவரம்!
- தண்ணீர் தேங்கினால் ரூ.10 லட்சம் வரை அபராதம்! – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
- சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் உண்டா? மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என அறிவித்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மழை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஆம், கே.கே.நகர், போரூர், ராமாபுரம், அடையாறு, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், அசோகர் நகர், ஜாபர்கான்பேட்டை, ஆவடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், அயனாவரம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை.
