ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (11:05 IST)

அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பு, சாலைப் பணிகள், மேம்பாலம், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.239 கோடி மதிப்பிலான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் அறிவிப்பதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறப்படும் நிலையில் அதிமுக அறிவித்த டெண்டர்களை ரத்து செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.