அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் - முதல்வர் உத்தரவு!
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கைத்தறித்துறையின் ஆய்வுக்கூடத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று தமிழகத்தில் பனை வெல்ல உற்பத்தியை அதிகரிக்க பொது பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் எனவும் முதல்வர் அந்த கூட்டத்தில் கூறினார்.